இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாகத்தில் துவங்கப்பட்டுள்ள சினிமாஸ்கோப் யென் அபார்ட்(An Apart Hotel) துவக்க விழா இன்று இனிதே நடைபெற்றது இதில் சினிமாஸ்கோபின் Managing Director A.RamaMoorthy, தயாரிப்பாளர் திரு.அழகப்பன், A.L.உதயா, இயக்குநர் ரா.பார்த்திபன், நடிகர் மனோபாலா, இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ஏ.எல்.விஜய், ஹான்ஸ் ராஜ் சாக்சேனா, நடிகர் ஸ்ரீ மண், ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ், ஹேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த சினிமா ஸ்கோப் யென் அபார்ட்(An Apart Hotel)ஹோட்டலுக்கு வரும் சினிமாவை ரசிக்கும் வாடிக்கையாளருக்கு சந்தோசம் தரும் வகையில் சினிமாஸ்கோப் ஹோட்டல் முழுவதும் சினிமாவை பேசும் வண்ணம் இந்த ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள ரூம்கள் ஒவ்வொன்றுக்கும் “ ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜயகாந்த், விஷால், கார்த்தி, பிரபு தேவா என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர்களின் பெயரிடப்பட்ட அந்த ரூம்களின் தனி சிறப்பு அம்சமே என்னவென்றால் அவர்கள் நடித்த வெற்றி திரைப்படங்களின் புகைப்படங்களை உள்ளே அமைந்துள்ளதுதான். ஹோட்டலுக்கு தங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகரின் பெயர் கொண்ட அறையை தேர்வு செய்து தங்கி கொள்ளலாம். சினிமாவை நேசிக்கும் அனைவரும் கண்டிப்பாக சினிமாவை நேசிப்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ள “ சினிமாஸ்கோப் “ ஹோட்டலுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும்.
விழாவில் சினிமாஸ்ஸ்கோப் ஹோட்டலின் Managing Director A.ராம மூர்த்தி அவர்கள் பேசியது :- எனக்கு வெகு நாட்களாக சினிமா எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.எனக்கு இங்கே இருந்த இடத்தை சினிமாவின் மேல் கொண்ட அன்பால் சினிமாஸ்ஸ்கோப் ஹோட்டலாக தயாரிப்பாளர் அழகப்பன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உருவாக்கியுள்ளேன். இந்த ஹோட்டலில் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு 15% டிஸ்கவுன்ட் உண்டு என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசியது ; சினிமாஸ்ஸ்கோப் ஹோட்டல் சிட்டியில் இருந்து மிகவும் அருகில் தான் உள்ளது. எனக்கு ஆழ்வார்பேட்டையில் இருந்து இங்கே வர வெறும் 45 நிமிடம் தான் ஆனது. இங்கே சினிமா நிறைந்துள்ளது. அருகில் பீச் இருக்கிறது. இங்கு இருக்கும் இந்த ஹாலை ப்ரிவியு தியேட்டராக மாற்றினால் நன்றாக இருக்கும். சனி, ஞாயிற்று கிழமைகளில் பிரஸ் ஷோவை இங்கு கூட வைக்கலாம் என்றார்.
நடிகர் ஏ.எல்.உதயா பேசியது :- சினிமாஸ்கோப் ஹோட்டலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கும் , நடிகர் சங்கத்தினருக்கும் நான் முன்னரே கூறியது போல் 25% நிச்சயம் டிஸ்கவுன்ட் உண்டு. சினிமாவை நேசிப்பவர்களுக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.
நம்முடைய வாழக்கையை துவங்குதே முதல் ராத்திரியில் தான் , இன்று முதல் இரவை துவங்கும் சினிமாஸ்கோப் ஹோட்டல் மிகப்பெரிய வெற்றி பெறும் ஏனென்றால் பெயரிலேயே ஸ்கோப் உள்ளது. நண்பர் உதயா அவரை விட இளமையான அழகப்பன் மற்றும் திரு. ராமமூர்த்தி ஆகியோர் துவங்கியுள்ள இந்த ஹோட்டல் நிச்சயம் வெற்றி பெறும்.என்னை இங்கு அழைத்து வந்தது இந்த ஹோட்டலின் பெயர் தான் என்று கூறியுள்ளார் ரா.பார்த்திபன்.