நடிகர் சூர்யாவை வைத்து கடைசியாக ஹரி இயக்கிய படம் ‘சிங்கம் 3’. இந்தப் படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். சிங்கம் படத்தின் நான்காவது பாகம் உண்டா என்றதற்கு நான்காவது பாகம் வராது என ஹரி கூறியுள்ளார்.
இந்நிலையில் விக்ரம் த்ரிஷாவை வைத்து ‘சாமி’’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் ஹரி. ‘இதன் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.. அது சிங்கம் 4 என தகவல் பரவியது. ஆனால் ஹரி அதை மறுத்துள்ளார். ‘சிங்கம் படத்தின் நான்காம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை.
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் எடுக்கிறேன். சாமி 2வுக்கு பிறகு அந்த படம் தொடங்கும். ஆனால் அது சிங்கம் படங்களின் தொடர்ச்சி அல்ல. புதிய கதையாக இருக்கும். அதே நேரத்தில் எனது பாணியில் வேகமான திரைக்கதை ஓட்டத்துடன் கூடிய படமாக இருக்கும். ஆனால் அது போலீஸ் கதையாக இருக்காது” என்றார் ஹரி.