தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு :வானிலை மையம்

rain
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Response