ஓ.பி.எஸ்’ஸை வீழ்த்த சசிகலா எடப்பாடி சதியா ?

saoped
தமிழகத்தின் முன்னால் முதல்வரும் பொதுச்செயலாலாருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் தற்காலிக முதல்வராக திரு ஒ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். சிலமதத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் நான்தான் என்று சசிகலா தெரிவித்தார். அச்சூழலில் திரு ஒ.பன்னீர்செல்வத்தை ராஜினமா செய்ய வைத்தார். அவர் இவ்வாறு செய்தது அக்கட்சியில் உள்ள சில எம்.பி. மற்றும் எம்.எள்.ஏ.க்களுக்கு பிடிக்கவில்லை அதனால் கட்சி விட்டுவிலகினர்.

பின்னர் சசிகலா முதல்வரகவிருந்த நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகி அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது. சசிகலாவிற்கு ஒ.பி.எஸ். இடியில் ஏற்ப்பட்ட விரிசலின் காரணமாக சசிகலா மற்றும் அதரவாளர்கலால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். பின்னர் அ.இ.அ.தி.மு.க.வில் ஒரு அடப்படை உறுப்பினராக கூட இல்லாத தி.தி.வி.தினகரனை,சசிகலாவின் உறவினர் என்ற காரணத்தால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பிறகு சசிகலா கரநாடகாவில் உள்ள பரப்பன ஆக்ராஹார சிறைக்கு சென்றார். பின்னர் ஒ.பி.எஸ் தலைமையாக கொண்டு உருவாகிய அணியினர் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்றும். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கொண்ட அணியினரும் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்றும் இரு அணியினரும் இரட்டை இலைக்காக தேர்தல் ஆணையத்தை அணுகினர். இந்த நிலைமையில் ஆர்.கே.நகர் இடைதேர்தல் வந்தது அப்போது இரு அணியினருக்கும் இரட்டை இல்லை கிடையாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தனர். பின்னர இரு அணியினரும் வெவ்வேறு சின்னம் வைத்து தேர்தலுக்காக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டனர்.

இவர்கள் இரு அணியனரும் போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் எப்படியாவது ஜெயத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் பணம் மற்றும் பரிசுபொருட்கலள் கொடுத்துள்ளனர். இதுபோன்று பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தெரிந்துகொண்டு தேர்தலை ரத்து செய்ததது. ரத்து செய்த அந்தநிலையில் இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று தினகரன் டில்லியில் ஒருவரிடம் 60 கோடிவரை லஞ்சம் தருவதாக கூறி 1.30 கோடி முன்பணம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டு முதல் தகவல் அறிக்கை வெளியடப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியைவிட்டு விளக்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்று தெரிவித்ததுடன் திரு ஒ.பி.எஸ். அவரகளிடம் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த நிகழ்வின் பின் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து தினகரனே இந்த கட்சி நன்றாக செயல்பட நான் விலக வேண்டுமென்றால் விலகிவிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இவர் விலகியது உண்மைய அல்லது திரு ஒ.பி எஸ். அவர்களை கட்சியில் அழைத்து. அவரை நிரந்தரமாக காலிசெய்வதர்கான ஒரு தந்திரமா இது காத்திருந்து பார்போம்.

Leave a Response