இரட்டை இலை சின்னம்! லஞ்சம் கொடுத்த டி.டி.வி. தினகரன்?.

lancham
டெல்லியில் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக லஞ்சம் வாங்கிய ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஆ.இ.அ.தி.மு.க. முன்னாள் முதல்வாரம் பொதுச்செயலாளரும் ஆனா ஜெ.ஜெயலலித்த அவர்களின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் சசிகலா
மற்றும் ஒ.பன்னீர் செல்வம் இரண்டாக பிளவு பட்டது. பின்னர் இரு அணியினரும் இரட்டை சின்னத்தை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணியம் முடக்கியது.

இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சுமார் 1.30 கோடி வரையிலானா பணம் டெல்லி காவல்துறையினரால் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியது. மேலும் இவருக்கு 60 கோடிவரை பேரம் பேசப்பட்டதாகவும் கூறபடுகிறது.

தனியார் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவிடம் தில்லி குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர, சசிகலா அணியிடம் இருந்து அதவாது, டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது தில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபப்திவு செய்துள்ளனர்.

Leave a Response