கடம்பன்- விமர்சனம்

kadamban1_3064015f
படம்- கடம்பன்

இயக்கம்- ராகவா, தயாரிப்பு- சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் தி ஷோ பீப்பிள், இசை- யுவன் ஷங்கர் ராஜா

நட்சத்திரங்கள்- ஆர்யா, கேத்ரின் தெரசா, மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்பராயன், தீப்ராஜ்ராணா,

‘மஞ்சப்பை’ புகழ் இயக்குனர் ராகவா இயக்கத்தில் மலை கிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக கடம்பன் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுப் பகுதியில் உருவானகதை என்பதால் இப்படத்தில் 60 யானைகள் இருக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ‘அவ்வையார்’ திரைப்படம் வெளியாகி 65 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே காட்சியில் இத்தனை யானைகள் இடம்பெறுவது இந்த ‘கடம்பன்’ திரைப்படத்தில் தான் என் குறிபிடத்தக்கது.

இருப்பினும் இப்படத்தில் வணப்பகுதிகளின் காட்சிகள் அருமையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கேத்தரின் தெரேசா பளிச் என்று தெரிகிறார். ஆர்யாவின் கட்டு மஸ்த்தான உடற்கட்டு கதைக்கு பொருந்தி உள்ளது.

மேலும் ஒரு பிரபல சிமெண்ட் கம்பெனி உரிமையாளராக வரும் தீப்ராஜ் ரணா படத்தில் வில்லனாக வருகிறார். நிஜ வாழ்க்கையில் வில்லனாக இருக்கும் எந்த ஒரு பெரிய தொழில் அதிபரோ அவருடைய குடும்ப உறுப்பினர்களோ ஒரு காட்டுக்கு சென்று தன்னுடைய எதிரியை சந்திக்க மாட்டார்கள். ஆனால் இந்த பாடத்திலோ வில்லன் மற்றும் அவருடைய தம்பி தனி தனியாக காட்டுக்கு சென்று எதிரியை சந்திப்பது போல் காட்சிகள் அமைத்துள்ளனர். வில்லனுடைய ஆட்கள் சுமார் 20 பேர் துப்பாக்கியுடன் வந்து ஆர்யாவை சூழ்கின்றனர். பின்னர் அனைவரும் ஆர்யாவையும் அவருடன் இருப்பவரையும் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருக்க ஆர்யாவும் அவருடைய கூட்டாளியும் தப்பிக்கும்படியாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி எவரும் நம்பும் விதத்தில் இல்லை என்பதும் ஆங்காங்கே சில காட்சிகளில் ஓட்டைகளும் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்த கடம்பன் நல்ல கதை அம்சம் கொண்ட படமாக இருந்தாலும் இயக்குனர் ராகவ் அவர்கள் திரைக்கதை அமைப்பதில் மற்றும் வசனத்தில் கோட்டை விட்டுள்ளார் என்பது படத்தின் பெரிய மைனஸ். இப்படத்தில் வில்லனுக்கு துணையாக டிரஸ்ட் உறுபினர் என்ற பெயரில் Y.G. மகேந்திரன் மற்றும் மதுவந்தி அருண் ஆகிய இருவரையும் இக்கதையில் சேர்க்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் கடம்பன் கட்டை காப்பாற்ற வந்தவன். இப்படத்தை அனைவரும் திரையரங்குளில் சென்று பாருங்கள்

Leave a Response