வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும், ஜெயலலிதாவுடன் நடித்த பெண்!…

large_ychg0ukw-15418
ஜெயலலிதா, சிவக்குமார் நடித்த காலத்தில் குரூப் டான்சராகவும், நடிகையாகவும் இருந்த ஜமுனா தற்போது வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் குரூப் டான்சராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணைந்து நடித்தவர் ஜமுனா. இவருடைய கணவப் மேக்கப் மேனாக இருந்துள்ளார். குரூப் டான்ஸ் ஆடிய காலத்தில் மிகவும் வசதி வாய்ப்புடன் திகழ்ந்த ஜமுனா, தன் கணவர் இறந்தபின்பு குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளார். அதனால் தான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவகுமார், கமல்ஹாசன் இவருக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் அவர்களிடம் சென்று ஜமுனா பணம் ஏதும் வாங்கவில்லை. தற்போது எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், தனக்கு நடிகர் விஷால் உதவி செய்ய வேண்டும் என்றும் ஜமுனா கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இவரை போல இன்னும் எத்தனை நலிந்து போன கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும் பார்த்து அவர்களுக்கும் தமிழ் திரையுலகினர் உதவிபுரிய வேண்டும்.

Leave a Response