இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் வரவிற்கும் புதிய திரைப்படம், “பள்ளிப் பருவத்திலே”. இப்படத்தை வி.கே.பி.டி கிரியேஷன்ஸ் சார்பாக டி.வேலு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, படத்தின் நாயகியாக ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா நடித்துள்ளார். இவர்களுடன், கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், ஞானசம்பந்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்களை வைரமுத்து, வாசு கோகிலா, எம்.ஜி.சாரதா எழுத விஜய் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை வினோத்குமார் மேற்கொள்ள, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்படத்தை பற்றி பேசிய இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர், கூறியதாவது இப்படத்தில் காமெடி, காதல் கலந்துள்ள குடும்ப பாங்கான திரைப்படம் என்று குறிப்பிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 நாட்கள் நடைப்பெற்றதாகவும், அந்த காட்சிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு, அம்பலாப்பட்டு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி இப்படத்தில் பள்ளிக்கூடம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்துள்ளதாக தெரிவித்தார். இயக்குனர் தான் அம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த போது, அப்பள்ளியில் பணியாற்றிய ஒரு நேர்மையான மற்றும் அன்பான ஒரு தலைமை ஆசிரியர் அவர்களை மனத்தில் கொண்டு இந்த கதாபாத்திரம் கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு வடிவமைகப்பட்டாது என தெரிவித்தார்.
இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைப்பெற உள்ளதாக இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் தெரிவித்தார்.