“கருப்பு ராஜா வெள்ளை ராஜா” படம்

karuppu
நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா தமிழில் இயக்க உள்ள “கருப்பு ராஜா வெள்ள ராஜா” படம் இயக்குகிறார்.

விஷால் – கார்த்தி நடிக்கவுள்ள ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் முதன்மை நாயகியாக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2011-ல் விஷால் நடிப்பில் வெளியான ‘வெடி’ படத்துக்குப் பிறகு தமிழில் படங்கள் இயக்காமல் இருந்தார் பிரபுதேவா. இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’, ‘ரா. ராஜ்குமார்’, ‘சிங் இஸ் ப்ளிங்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

தற்போது மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளார் பிரபுதேவா. விஷால் – கார்த்தி இருவரும் நாயகர்களாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக சைஷா சைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று வெளியான ‘வனமகன்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

Leave a Response