மத்திய அமைச்சர் பாராட்டிய காமெடி நடிகர்!..

vivek2
காமெடி நடிகர் விவேக்கிற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் பசுமை கலாம் என்ற திட்டத்தின் மூலம் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நட்டு வருகிறார். ஒரு கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது வரை 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

காமெடி நடிகர் விவேக்கின் இந்த சேவையை பாராட்டி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவேக் வீட்டிற்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, முன்னாள் ஜனாதிபதி மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றி வரும் நடிகர் திரு விவேக் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் எளிமையை பார்த்து வியந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response