முக்கிய ஆலோசனையில் தலைமை தேர்தல் கமிஷன்!..

head election-comission
டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரிகள் தலமை கமிஷனர் நஜீம் ஜைதியுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனி தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ரா தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.குறிப்பாக பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான ஆவணங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா செய்த ஆவணங்கள் கிடைத்ததால் தேர்தல் நடந்தும் செல்லாது என ரத்து செய்யப்பட்டது. இது போல் ஆர்.கே.நகர்., தேர்தலும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த தொகுதியில் வாக்காளர்களர்கள் ஒருவருக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் பணம் பட்டுவாடா தொடர்பாக வருமான வரி துறையினர் ஆவணம் வெளியிட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் வழங்க வேண்டிய தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. மொத்தம் 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கணக்கிடப்பட்டிருந்தது.

Leave a Response