ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!..

anbumani
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது. சுயேட்சை வேட்பாளர் உள்பட 62 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் அதிகளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பெருங்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் எம்பி அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்தியமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டால் பாமக சார்பில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதால், ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Response