பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவின் பெண்களுக்கான கிக்பக்சிங் பயிற்சி!..

BipashaBasuWorkout
பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கிக்பாக்ஸிங் பயிற்சியை கற்றுக் கொடுக்கிறார் நடிகை பிபாஷா.

பாலிவுட்டின் பிரபலமான நடிகை பிபாஷா பாசு. இவர் கடந்தாண்டு கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டு வேதனையடைந்தார். பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் வகையில் தற்காப்பு கலை பயில புதிய பயிற்சி மையம் தொடங்க இருக்கிறார் பிபாஷா.

இதன் முதற்கட்டமாக டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் பயிற்சி மையம் அமைக்கவுள்ளார். இதில் பெண்களுக்கான கிக்பாக்ஸிங் உள்ளிட்ட பல தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. சுமார் 13 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் இந்த பயிற்சியில் ஈடுபடலாம்.

இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இன்னும் நிறைய இடங்களில் பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளார் பிபாஷா. இவர் மட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் பெண்களுக்கு தற்காப்பு கலையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மும்பை மற்றும் டெல்லியில் தற்காப்பு கலை பயின்றவர்களோடு இணைந்து பெண்களுக்கு பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response