மலையாள நடிகைக்கு ஏற்பட்ட சம்பவம் மீண்டும் இன்னொரு நடிகைக்கு ஏற்ப்பட்டுள்ளது…

archaana
மலையாள நடிகை காரில் கடத்தல் சம்பவம் போன்று தற்போது நடிகை அர்ச்சனா கௌதமுக்கும் ஏற்பட்டுள்ளது. நடிகை அர்ச்சனா கௌதமுக்கு சமூக வலைதளத்தில் ஒருவர் நண்பராகியிருக்கிறார். அவர் அர்ச்சனாவிடம் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தன்னுடன் வந்தால் ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கித் தருவதாகவும் அழைத்துள்ளார்.

இதனை உண்மை என நம்பிய அர்ச்சனா அந்த நபருடன் காரில் சென்றுள்ளார். வழியில் அந்த நபரின் நண்பர்கள் சிலரும் காரில் வந்துள்ளனர். ஆனால் திடீரென அவர் சிபிஐ அதிகாரி என்றும் அர்ச்சனா மீது விபச்சார வழக்கு தொடருவேன் என்றும் மிரட்டி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.

அர்ச்சனா தன் அண்ணனுக்கு போன் செய்து தகவலை கூற, அவரும் பணத்துடன் விமான நிலையம் வருவதாக கூறியிருக்கிறார். கார் விமான நிலையத்திற்குள் சென்றதும் அர்ச்சனா காரில் இருந்து திடீரென கூச்சல் போட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அர்ச்சனாவை காப்பாற்றினார். உடனே காரில் இவருந்தவர்கள் தப்பித்து ஓட, ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும் அவரை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Response