இயக்குனராக களமிறங்கும் கன்னட நடிகை…

vinaya prasath
வினயா பிரசாத் இவர் தமிழ் திரையுலகில் “தாய்க்குலமே தாய்க்குலமே” எனும் படத்தில் நாயகி நடித்தவர் இவர் தற்பொழுது இயக்குனராக களமிறங்குகிறார்.

மேலும் 1995ல் பாண்டியராஜனுக்கு ஜோடியாக ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ படத்தில் அறிமுகமானவர் தான் கன்னட நடிகை வினயா பிரசாத். பின்னர் அவர் ‘சந்திரமுகி’ படத்தில் நாசருக்கு மனைவியாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டும் இல்லது வினயா பிரசாத் 1993ல் வெளியான ‘மணிச்சித்திரத்தாழு’ எனும் மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் கன்னடம், மலையாளம் என சுமார் 150 படங்களில் நடித்துள்ளார்..இப்போது புதிதாக இயக்குனர் துறையிலும் குதித்துள்ளார் வினயா பிரசாத். இவர் இயக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘லட்சுமிநாராயணா பிரபஞ்சனே பேரே’.

இந்தப்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும் இவர் தான் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல இவரது கணவர் ஜோதி பிரகாஷும், மகள் ப்ராதமா பிரசாத்தும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்களாம். ஆக மொத்தம் குடும்பமே இந்தப் படத்தில் நடிக்கிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 20ம் தேதி துவங்க இருக்கிறது.

Leave a Response