காவல்துறை பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் பேச்சு!..

capture
சென்னை வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவல்துறை மையத்தில் துணை ஆய்வாளர்களுக்கு தேர்வு பெற்ற 1,028 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த பயிற்சி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக காவல்துறையினர் எப்போதும் விழிப்புடனும், மக்கள் தோழனாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமூக விரோத சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஒயிட் காலர் குற்றங்கள் என்று அழைக்கப்படும் இணைய மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள, கம்ப்யூட்டர் மற்றும் இணைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். குற்றங்களை தடுக்க வேண்டுமெனில் காவல்துறையினர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நலமாக இருக்க வேண்டியது அவசியம் என்று பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் சட்டம் என்பது ஒரு கருவியல்ல என்றும், அது மக்களை காப்பாற்ற வேண்டிய வலிமைமிக்க பாதுகாப்பு வளையம் என்றும் கூறினார்.

Leave a Response