முக்குலத்தோர் புலிப்படை சங்கத்திலிருந்து கருணாஸ் நீக்கம்!..

karunaas
முக்குலத்தோர் புலிப்படை சங்கத்தில் இருந்து தமிழ் திரைப்பட நடிகரும், அதிமுக அம்மா கட்சியின் ஆதரவு எம்எல்ஏ ஆகவும் உள்ள கருணாஸ், நீக்கப்பட்டுளளார். இதற்கான அறிவிப்பு மதுரையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முக்குலத்தோர் புலிப்படையின் மாநில செயலாளர் பாண்டித்துரை,மற்றும் துணைத்தலைவர் சந்தான குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், நடிகரும் எம்.எல்.ஏ.வும் ஆனா கருணாஸ் தனீயாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படும் அவர், அண்மையில் எங்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். இது ஏற்புடையதல்ல என்பதால் எங்கள் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் தீர்மானத்தின்படி, தற்போது அவரை நாங்கள் கட்சியில் இருந்து நீக்குகிறோம், எனக் குறிப்பிட்டனர்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் பங்கற்ற கருணாஸ், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால், அவரது கட்சிக்குள் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, அவரது சொந்த தொகுதியான திருவாடனையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் அங்குள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை போடச் சென்றபோது, உள்ளூர் மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததால், கருணாஸ் பாதியிலேயே திரும்பினார். இதற்கு, தனது சொந்த கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் தான் காரணம் என, அதிருப்தி அடைந்த கருணாஸ், கட்சியில் இருந்து அனைத்து நிர்வாகிகளையும் நீக்குவதாக, தன்னிச்சையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு, இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். தற்போது மதுரையில் நடைபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், கருணாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக, முடிவு செய்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response