இன்று முதல் ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை துவங்கும் ஒ.பி.எஸ்…

panneerselvam-pti
ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆர்கே நகரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

அதிமுக சசிகலா மற்றும் ஓபிஎஸ் என்று இரண்டு அணியாக பிரிந்ததை அடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டி உருவானது. ஓபிஎஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிடவே, இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் அதிமுக அம்மா என்ற கட்சி பெயரில் தொப்பி சின்னத்திலும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற கட்சி பெயரில் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

ஆர்கே நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. திமுகவின் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சியின் டிடிவி தினகரன் தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று தன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் ஏற்கனவே ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response