ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓ.பி.எஸ், சசிகலா தரப்பினர் கட்சியின் பெயர்கள் அறிவித்துள்ளனர்!…

panneer
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் இருதரப்பினருக்கும் கட்சி பெயர்களை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி காலியானது. அதற்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தலைமையில் பிரிந்து நிற்கிறது. அவர்கள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், ஓ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரிக்கை விடுத்த நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் 3 சின்னங்கள் மற்றும் 3 கட்சியின் பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் முன்மொழிந்தனர். அதிலிருந்து கட்சியின் பெயர்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டன. அதன்மூலம் சசிகலா அணியின் கட்சியின் பெயர் ’அதிமுக அம்மா’ என்றும், ஓ.பி.எஸ் அணியின் கட்சியின் பெயர் ‘அதிமுக புரட்சி தலைவி அம்மா’ என்றும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் சசிகலாவிற்கு தொப்பி சின்னமும், ஓ.பி.எஸ் தரப்பிற்கு இரட்டை மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Response