‘ஏ’ சான்றிதழாள் ‘டோரா’ படக்குழு அதிர்ச்சி!

dora
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரா’ படத்துக்கு, தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

‘மாயா’ படத்தைத் தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் உருவான மற்றொரு பேய் படத்தில் நடிக்கத் தொடங்கினார் நயன்தாரா. புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக்.

தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளார்கள். தம்பி ராமையா மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

‘டோரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

மார்ச் 31-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிட்டுள்ளதால், மீண்டும் மறுதணிக்கைக்கு சென்றால் தாமதமாகும் என்பதால் ‘ஏ’ சான்றிதழோடு வெளியிட முடிவு செய்துள்ளார்கள். மேலும், தொலைக்காட்சி திரையிடலுக்காக மீண்டும் மறுதணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது படக்குழு.

Leave a Response