மகாகவி பாரதியை இழிவுப்படுத்திய ‘கவன்’ திரைப்பட குழுவினர்..

IMG_1907_wm
இயக்குனர் கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘கவன்’. இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் டி. ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான இசையை ‘ஹிப் ஹாப்’ ஆதி அமைத்துள்ளார்.

‘கவன்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு முன்பு இப்படத்தின் சில காட்சிகளும் இரு பாடல்களும் திரையிடப்பட்டது. அப்பாடல்களில் ஒன்று மகாகவி பாரதியார் இயற்றியுள்ள ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாடல் மெட்டு மாற்றப்பட்டு ரீமிக்ஸ் என்று சொல்லக்கூடிய வகையில் ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்துள்ளார். அப்பாடலுக்கான காட்சி பாரதியார் மற்றும் அவர் பாடலை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

சில தமிழ் திரைப்படங்களில் வரும் குத்து பாடல்களை விட மிக மட்டமான தரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாடலில் விஜய் சேதுபதி கிட்டார் கருவி வாசிப்பதை போலும், டி. ராஜேந்தர் வேட்டியை மடித்து கொண்டு குத்தாட்டத்தை விட மிக கேவலமாக ஆடும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தமிழ், தமிழ் என்று அவ்வப்போது குரல் எழுப்பும் டி.ராஜேந்தர் எப்படி இந்த பாடலுக்கு நடனமாட ஒத்துக்கொண்டார் என்பது அனைவருக்கும் ஒரு கேள்விக்குறி. ஜல்லிக்கட்டு விஷயத்தில் தன்னை தமிழன் என்று தானாக டமாரம் அடித்துக்கொண்ட ‘ஹிப் ஹாப்’ ஆதி, தான் வேஷக்காரன் என்பதை நிரூபிக்கும் விதத்தில் பாரதியாரின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாடலுக்கு குத்துப்பாடலை விட கேவலமாக ரீமிக்ஸ் செய்து அப்பாடலை பதிவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் எங்கு ஏடாகூடமாக கேள்விகள் எழுப்பி விடுவார்களோ என சுதாரித்து கொண்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாங்கள் மட்டுமே பேசிவிட்டு கேள்வி கேட்கவிடாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ‘ஒற்றன் செய்தி’ நிருபர், இயக்குனர் கே.வி.அனந்த்திடம் இப்பாடலை பற்றி வருத்தத்தை தெரிவித்தார். அதற்க்கு பதிலளித்த கே.வி.ஆனந்த தான் அப்பாடலை ஒரு நாட்டுப்புற பாடலாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் விரும்பும் விதமாக பாரதியாரின் பாடல் மெட்டு மாற்றி ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், பல லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர் என்றும் பெருமையாக தெரிவித்துக்கொண்டார்.

தான் ஒரு பெரிய இயக்குனர் என்று தன் மனதில் நினைத்துக்கொள்ளும் கே.வி.ஆனந்துக்கு, பார்வையாளர்கள் பாடகர் சுச்சி வெளியிட்ட ஆபாச விடியோகளுக்கு இணையத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் இருந்தனர் என்பது தெரியாது போல! ஒரு நல்ல இயக்குனர் என்பவர் மக்களுக்கு தான் எடுத்து சொல்லும் திரைப்படம் எந்த ரசனை கொண்ட படமாக இருந்தாலும் சமுதாயத்தையோ அல்லது முன்னோர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் ‘கவன்’ படத்தில் இழிவு படுத்தும் விதமாக இடம்பெற்றிருக்கும் பாரதியாரின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாடலை பாராட்டுகிறார்களா அல்லது தடை செய்ய முயற்சிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response