புரூஸ்லீ திரைப்பட விமர்சனம்…

bru
கதை, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்

ஜீ வீ பிரகாஷ், சரவணன், ராம்தாஸ்: அடிதடி, போலீஸ் இதக் கண்டாவே பயந்து ஓடுற ஒருத்தன் ஒரு கொலைய லைவ்வா பாக்குறான். அந்தக் கொலையோட போட்டோ ஹிரோ கிட்ட இருக்கு. இங்லீஸ் படம் பார்த்தே வில்லத்தனம் பண்ற வில்லன்கிட்ட ஹிரோயின் மாட்டிக்க ஹீரோ எப்படி காப்பாத்துறாரு இது தான் கதை.

முழுசா கதை சொல்றதே கஷ்டம் அவ்வளவு சிக்கலான கதையை எளிமையான காமெடியால மறைச்சு வச்சிருக்காங்க. டைரக்டர் தன்னோட ஆடியன்ஸ் யாருங்கிறத முடிவு பண்ணிட்டு தான் படமே எடுத்திருக்காரு. அந்த ஆடியன்ஸ கொஞ்சம் கூட குறை வைக்காம திருப்தி படுத்துது படம். தடார்னு ஒரு ஆக்ஸன்ல ஆரம்பிக்குது படம். ஹிரோ ஹிரோயின் தோளில் சாயும்போதே காமெடி மோடுக்கு மாறிடுது. படம் சீரியஸ் சீனையும் ஒத்த டயலாக்ல காமெடி ஆக்கிடுறாங்க ஜீ வீ பிரகஷிம், சரவணனும்.

ஹிரோயின் அவ்வளவு அழகு முதல் பாட்டுல ஆடுற ஆட்டம் இளசுங்கல துள்ள வைக்கும். டப்பிங் தமிழ் மட்டும் தான் கொஞ்சம் பிரச்சனை.

ராம்தாஸ் அசால்ட் வில்லனா அதகளப்படுத்துறாரு. ஆனந்த்ராஜ், மன்சூரை எல்லாம் தூக்கி ஓரமா நிக்க வச்சிடுறாரு. கோர்ட்ல அவர் பண்ற காமெடி அட்டகாசம்.

மொட்டை ராஜேந்திரன் இவர் இல்லாம படமே வராது போல. அத்தனை படத்திலும் அண்ணன் வந்தவுடன் கைத்தட்டல் தான்.

ஒவ்வொரு காட்சியும் படு பிரமாண்டம். அத மொத்தமா அழகா படம் பிடிச்சிருக்கார் ஒளிப்பதிவாளர் சங்கர். இசை ஜீவி பல படங்களின் இசை ஒண்ணா கலந்து கிடக்கு.

நொடிக்கு நொடி ஒரு டிவிஸ்ட்டோ காமெடி தெறிக்குது. டைரகடர் நிறைய படங்களா பார்த்து படம் எடுத்திருக்காரு. அத்தனை படங்களையும் ஓட்டி தள்ளுறாங்க. இளைஞர்களுக்குனு சொல்லி வைச்சு தச்ச படம்.

Leave a Response