கட்டப்பாவை காணோம் – விமர்சனம்

kattapava-kaanom-poster
கட்டப்பாவை காணோம்

கதை, இயக்கம்- மணி செய்யோன்

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஸ், காளிவெங்கட்

கட்டப்பா ஒரு வாஸ்து மீன் வில்லன்கிட்ட இருந்து திருடு போயிடுது. ஹீரோ சிபி ஒரு ராசி கெட்டவர் அவர் வாழ்க்கையில அந்த மீன் வந்து சேருது அது அவர் வாழ்க்கையை எப்படி மாத்துது இது தான் சுருக்காமான கதை.

சிபிராஜ் நடிப்பில் நல்ல முன்னேற்றம். தன்னோட கேரக்டர் எந்த அளவு ரியாக்ட் செய்யணுமோ அத கச்சிதமா பண்ணியிருக்கார். ஆனா இந்த கேரக்டர எப்படி தேர்ந்தெடுத்தார்னு தான் தெரியல. ஏன்னா அவர் கேரகடர் படத்துல கடைசிவரை எதுவுமே பண்ணல அதுக்கும் கதையில வழியும் இல்லை. கடைசிவரைக்கும் அவரா எந்தப்பிரச்சனையையும் தீர்க்கல அப்புறம் எப்படி ஹிரோ?

ஐஸ்வர்யா ராஜேஸ் அராத்தான மனைவி கேரக்டர் வருக்கும் முழுக்க என்ன ரோல்னு தெரியல சிபி கூட கொஞசம் ரொமான்ஸ் பண்ணியிருக்கார். இவுங்கள் தவிர படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் யோகிபாபு அவர் வர்ற இடத்தில சிரிக்க வச்சிடுறாரு. காளிவெங்கட் படம் புல்லா செக்ஸ் ஜோக்கா அடிச்சு தள்ளுறாரு. பல இடங்கள காப்பத்துறதே அவர் தான். மத்தபடி அந்த குட்டிப்பாப்பா ரியாக்சன் பரவாயில்லை.

மொத்தப் படமும் ரெண்டு வீட்டுக்குள்ள நடந்து முடிஞ்சிடுது. படத்தில் வர்ற எல்லோருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆனா நமக்கு அந்தப் பிரச்சனியோட வீரியம் தொத்திக்காதது தான் மைனஸ்.

சின்ன பட்ஜெட் படம்கிறத ஒளிப்பதிவு, இசையும் தெளிவா சொல்லிடுது. இந்தக்கதையில லாஜிக்குனு ஒண்ணு சுத்தமா கிடையாது. கதையில் எதுக்கு அப்புறம் எதுனு ஒரு தெளிவும் கிடையாது. மீன் காணாம போன வில்லன் எதுவுமே பண்ண மாட்டேங்கிறார். ஹீரோ வீட்டுக்குள்ள ரௌடிக்கும்பல் வந்து டேரா போட்டாலும் ஹிரோ ஒண்ணு பண்ண மாட்டேங்கிறார். ரௌடிக்கும்பலும் ஒண்ணும் பண்ணலை. ஆனா படம் முழுதும் கேப் விடாம சிரிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காங்க. அதுல சில இடங்கள்ல சிரிக்கவும் வைச்சிருக்காங்க! செக்ஸ் காமெடி தான் ஓவர். மத்தபடி ஒரு தடவை கட்டப்பாவை தேடலாம்.

Leave a Response