40 ருபாய்க்கு பதில் ரூ. 4,00,000 ஆட்டையைப் போட்ட டோல் பிளாசா

debit-card-swipe
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே குண்ட்மி டோல் கேட்டில் மருத்துவர் ஒருவரின் டெபிட் கார்டில் இருந்து ரூ. 40க்கு பதிலாக ரூ. 40,00,000 எடுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த மருத்துவர் ராவ் தனது காரில் மும்பைக்கு கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டு இருந்தார். அப்போது, குண்ட்மி என்ற டோல் கேட் கட்டணத்திற்காக தனது டெபிட் கார்ட்டை கொடுத்துள்ளார். கார்டு ஸ்வைப் செய்தவர், ரூ. 40 எடுத்துக் கொள்வதற்கு மாறாக ரூ. 40,00,000 எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான ரசீதை மருத்துவரிடம் கொடுத்துள்ளார். 4 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டது தொடர்பான குறுஞ்செய்தி ராவ் செல்போனுக்கு வந்ததையடுத்து, டோல் கேட் ஊழியர்களிடம் மருத்துவர் வாக்குவாதம் செய்தார். 2 மணி நேரம் மருத்துவர் வாதாடிய பின்னரும் தங்களது தவறை டோல் கேட் ஊழியர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து, அங்கிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் அதிகாலை 1 மணிக்கு ராவ் புகார் அளித்தார்.

பின்னர் தலைமை காவலரை அழைத்துக் கொண்டு, டோல் கேட்டுக்கு ராவ் சென்றார். இறுதியில், ஊழியர் தவறாக பணத்தை எடுத்துக் கொண்டதாகவும். அதற்கு செக் அளிப்பதாகவும் டோல் கேட் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு செக் வேண்டாம் பணம்தான் வேண்டும் என்று ராவ் கேட்க, அதிகாலை 4 மணிக்கு 3,99,960 ரூபாயை ரொக்கமாக வழங்கினர்.

இதுகுறித்து தலைமை காவலர் கூறுகையில், இந்த குண்ட்மி டோல் கேட்க்கு தினமும் ரூ. 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்றார்.

Leave a Response