மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்

Customized_Album_Cover_Movieroc_K

மொட்ட சிவா கெட்ட சிவா

இயக்கம் – சாய் ரமணி

ராகவா லாரன்ஸ் , நிக்கி கல்ராணி, சத்யராஜ்

தெலுங்கு பட்டாஸ் படம் தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா வாகி வந்திருக்கிறது. அடித்தட்டு ஆடியன்ஸை குறிவைத்து வந்திருக்கும் படம் அவர்களை குதூகலம் செய்வதாகவே இருக்கிறது.

போலிஸ் அப்பா, வேலை காரணமாக தன் அம்மாவின் சாவுக்கு காரணமாகி விடுவதால் வெறுத்து ஓடிப்போகிறார் ஹிரோ. திரும்ப போலிஸாகி வரும் ஹீரொ வில்லன்களுடன் சேர்ந்து கூத்தடித்து அப்பாவுக்கு டார்ச்சர் கொடுக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் போலிஸ் வேலையின் உண்மையும், சட்டம் காக்கப்பட வேண்டிய கடமையும்,உணர்ந்து திருந்தும் ஹீரோ வில்லன் கும்பலை பந்தாடுகிறார்.

பி அன் சி க்கு ஏற்ற மாஸ் கதை. லாரன்ஸ்க்கு பக்காவாக பொருந்தி விடுகிறது. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பரபரவென நகர்கிறது. காமெடி , சோகம், வேகம், காதல், டூயட் என எதுவும் மிஸ்ஸாகவில்லை.

கெட்ட போலீஸாக முதல் பாதியில் லாரன்ஸ் புகுந்து விளையாடுகிறார். அவர் செய்யும் சேட்டைகள் கலகலப்பாய் இருக்கிறது. பிற்பாதி ஆக்‌ஷன் முகம் ரசிகர்களை தெறிக்க விடுகிறது. நிக்கி கல்ராணி கமர்ஷியல் படத்தின் கரெக்டான நாயகி. பாடல்களில் குறைந்த ஆடையில் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடிக்கிறார். லட்சுமிராய் ஒரு குத்துப்பாடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

பி அன் சி ஆடியன்ஸிற்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று லிஸ்ட் போட்டு இறங்கி அடித்திருக்கிறார்கள். லாரன்ஸ் தன்னை மீண்டும் மாஸ் மசாலா கிங் என நிரூபிக்கிறார்.

படம் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டத்தை கண்முன் நிறுத்துகிறது. சத்யராஜ் அப்பாவாக அடக்கி வாசித்திருக்கிறார்.

பாடல்களும் இசையும் குத்தாட்டம் போட வைக்கிறது. எம் ஜி ஆரின் ரிமேக் பாட்டில் தியேட்டர் ஆடுகிறது.

ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் கொண்டாட்டம் ” மொட்ட சிவா கெட்ட சிவா”. மொத்தத்தில் குதூகலம்.

Leave a Response