குற்றம் 23 திரைபடகுழுவினரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்..

kutram 23
இயக்குநர் அறிவழகனின் ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ என மூன்று படங்களுமே வெவ்வேறு கதைக்களங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள். அறிவழகனின் நான்காவது படம் ‘குற்றம் 23’.

இப்படம், செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின்னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்தான் குற்றம் 23. அறிவழகன் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள “குற்றம் 23” திரைப்படம்,தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சில தினங்கலுக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரையிட்டுக் காட்டுவதற்காக சிறப்புக் காட்சி ஒன்று,அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்படத்தை படத்தின் கதாநாயகன் அருண் விஜயுடன் குற்றம் 23 படத்தை ரஜினிகாந்த் பார்த்தார். இதன் பின்னர் குற்றம் 23 படம் சுவாரஸ்யமாக இருந்ததாக பாராட்டிய ரஜினிகாந்த்,படக்குழுவினருக்கும் இயக்குநர் அறிவழகனுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தை அருண் விஜய் சிறப்பாக செய்திருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் இந்த எதிர்பாராத பாராட்டினால்,குற்றம் 23 படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Response