தேர்தல் பணிக்கு வர மறுத்த ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு!!!..

up assambly
உத்தரபிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட மறுத்த 90 அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாளை மறுநாள் (11-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பணியாற்றுவதற்காக மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தேர்தல் கமி‌ஷன் நியமித்தது. ஆனால் பிலிபிட் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட அரசு ஊழியர்கள் மறுத்துவிட்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 103 ஊழியர்களே தங்களுக்கு உடல் நலம் சரி இல்லை என்றும் வயதாகிவிட்டது தேர்தல் பணியாற்ற முடியாது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தனர். அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் வழங்கினார்கள். தேர்தல் கமி‌ஷன் சட்ட விதிப்படி தேர்தல் பணியாற்ற மறுத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி தேர்தல் பணியாற்ற மறுத்த 90 ஊழியர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்திருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மசூம் அலி சர்வார் தெரிவித்தார். முதல் கட்டமாக 90 பேருக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு கட்டாய ஓய்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே பிலிபிட் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட பிறகு 87 பேர் தேர்தல் பணி தொடர்பான பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இது சட்டப்படி குற்றமாகும். இதையடுத்து 87 பேர் மீதும் (எப்.ஐ.ஆர்.) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Response