ஓரிரு தினங்களில் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு

election_commi
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. போதுசெயலாளரும் முன்னால் முதல்வறும் ஆனா ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது சட்டப்பேரவைத் தொகுதி சென்னையின் ஆர்.கே.நகர் தொகுதி. அவரது மறைவையடுத்து, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஆறு மாத காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில் குடியரசு தலைவரின் பதவிக்காலம் முடிவதையொட்டி, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, காலியாக உள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை அதற்குள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.அதன்படி, காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் உள்பட நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.குடியரசுத் தலைவராக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response