உண்ணாவிரத போராட்டம் ஒ.பி.எஸ்.அறிவிப்பு ஜெ.மரணம் நீதி விசாரணை

images (4)
ஜெ. மரணத்தில் நீதி விசரனைகோரி மார்ச் 8 ல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும என்று ஆ.இ.அ.தி.மு.க. முன்னாள் முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சசிகலா மற்றும் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆ.இ.அ.தி.மு.க. இரண்டாக பிளவுற்று செயல்பட்டுவரும் இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜெயலலிதாவிற்கு அவ்வாறு சிகிச்சை அளிக்க வற்புறுத்தியதை யாரும் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பின்னர் ஜெயலலிதா இறந்த பிறகு, நிர்பந்தத்தின் காரணமாகவே தான் 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றதாக கூறினார். ஆனால் தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளால் பொறுமையிழந்தவர்கள், தன்னை அவமானப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக குறிப்பிட்டார். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் உண்மைகளை பொதுமக்கள் அறிய, உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக வரும் 8ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். அது நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Response