உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஐஐடி மாணவர்….

Tamil_News_large_1719801
ஓடிச மாநிலம்,கேந்தரப்பரா மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பட்டதாரிகள் போட்டி இட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள எல்ல மாநிலங்களிலும் படித்த பட்டதாரிகள் அரசியலுக்கு வரவேண்டு என்று சொன்னது போல் ஐஐடி பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், பி.எச்.டி., மற்றும் சட்டப்படிப்பு பட்டதாரிகள் என பலர் ஒடிசா மாநில உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

குறிப்பாக ஓடிச மாநிலம் கேந்தரப்பரா மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பட்டம் படித்தவர்கள் அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உட்கடை கிராமங்களில் கூட, படித்தவர்களுக்கு மக்கள் அதிகமான ஆதரவு தெரிவித்துள்னர்.

இதுகுறித்து கேந்திரப்பரா மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற முன்னால் ஐஐடி பட்டதாரி மாணவரான நிகார் ரஞ்சன் பெவூரா, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, போட்டியிட்டுள்ளார். பஞ்சாயத்து சமிதி உறுப்பினராக தேர்வாகி உள்ள இவர், ‛பணம் சம்பாதிப்பதற்காகவே அரசியலில் சேர வேண்டும் என்ற மனப்பான்மை அதிகமாகிவிட்டது. இது தவறு என்பதை நிரூபிப்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன். நான் நல்லது செய்வேன் என்ற நம்பிகையில் மக்கள் என்னை தேர்வு செய்துள்ளனர். அந்த நம்பிக்கையை எப்போழுதும் எமற்றமாட்டோம் என்றார்.

இவரைப் போல பல பட்டதாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். சட்டக்கல்லூரி பேராசிரியர், வழக்கறிஞர், கல்லூரி பேராசிரியர் என பலர் தங்கள் பணிகளை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்கி உள்ளனர். ‛அரசிடம் இருந்து ஏராளமான பணம் வருகிறது. ஆனால் அது எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. பணம் முழுவதும் மக்களுக்கு செல்லவேண்டும். என்று இவர்கள் கூறி உள்ளனர்.

இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.இன்றைய அரசியல்வாதிகள்…

Leave a Response