காவலர்கள் கண்ணெதிரில் நடந்த கொடூரகொலைக்கு, பாமக ராமதாஸ் கண்டனம்..

ramadash 987945

காவலர் பாதுகாப்பில் இருந்தவர் கொடடூரகொலை செய்யப்பட்டார். சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து, சந்தி சிரிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு  அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் அடுத்தடுத்த  நடைபெற்று வரும் கொலை,கொள்ளை நிகழ்வுகள் குறித்து கவலை ஏற்படுகிறது என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார்.

திருநெல்வேலி காவல்துறை பாதுகாப்பில் இருந்த கைதி சிங்காரம் மிகவும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கைதி சிங்காரம் ஆயுதப்படை காவலர்களால் கொண்டு செல்லப்பட்ட போது, அங்கு வந்த கும்பல் கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

கைதி சிங்காரம் நீண்ட நாட்கள் கண்காணிக்கபட்டு அதன் பின்னரே படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இதைபோலவே கடந்த 12ஆம்  தேதி திருவண்ணாமலையில் ஆதிமுகவின் முன்னாள் நகர செயலாளர் கனகராஜ் மற்றும், வேலூர் காட்பாடியில் தனியார் கல்லூரி அதிபர் ரவியும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான தேவைகளில் முக்கியமானது சட்டம் -ஒழுங்கு ஆகும். எனவே காவல் துறையை சீரமைத்து சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று பாமக ராமதாஸ் தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Leave a Response