ஹைட்ரோகார்பன் திட்டம்! மார்ச் 3 பாமாக போராட்டம்….

Anbumani-Ramdoss-indialivetoday (1)
டெல்டா பகுதிகளில் மீதேன், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பாமாக சார்பில் வரும் மார்ச் 3ஆம் தேதி வெள்ளிகிழமை நெடுவாசல் மற்றும் காரைகாலில் தொடர் முழக்கப் போராட்டங்கள் நடை பெற உள்ளதாக பாமாக அன்புமணி கூறியுள்ளார்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுகோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மீதேன் திட்டத்தையும், பாறை எரிவாயு திட்டத்தையும் செயல்படுத்த முயன்று தோல்வியடைந்த மத்திய அரசு,இப்பொது ஹைட்ரோகார்பன் என்ற பொதுபெயரில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களே போராடி வெற்றி பெறவேண்டிய நிலை தான் உள்ளது. இக்காரணத்தினால் நெடுவாசலில் எனது தலைமையில் அறபோராட்டம் நடைபெறும் என்று பாமாக அன்புமணி அவர்கள் அறிவித்துள்ளார்.

Leave a Response