மீண்டும் இணைகிறார்கள் ராஜேஷும் சந்தானமும்….

Santhanam_Rajesh_Joins_Once_again
ராஜேஷ் இயக்கத்தில் வெளியான `சிவா மனசுல சக்தி’, `பாஸ் என்கிற பாஸ்கரன்’, `ஒரு கல் ஒரு கண்ணாடி’, `ஆல் இன் ஆல் அழகு ராஜா’, `வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களில் எல்லாம் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். ராஜேஷின் சமீபத்திய வரவான, `கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் மட்டுமே சந்தானம் நடிக்கவில்லை.

ராஜேஷ் படங்களில் சந்தானத்தினால் நடிக்க முடியாத காரணம் அவர் கதாயானயகனாக நடிக்க ஆரம்பித்ததே காரணம். தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் தற்போது, `சர்வர் சுந்தரம்’, `மன்னவன் வந்தானடி’, `சக்க போடு போடு ராஜா’, `ஓடி ஓடி உழைக்கனும்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டு பிஸியாக உள்ளார்.

ராஜேஷ் மற்றும் சந்த்தானத்தின் கூட்டணிக்கு ரசிகர் மத்தியில் அமோக வரவேற்ப்பு எப்போதும் உண்டு. இந்நிலையில் சந்தானத்தை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க ராஜேஷ் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாராக உள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி அல்லது நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்படுவர் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response