பார்வையற்றவர்களுக்கு ‘அதே கண்கள்’ சிறப்பு காட்சியை திரையிட்ட தயாரிப்பாளர்…

Adhey Kangal Special Screening for Visually Impaired
திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பாக சி.வி.குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘அதே கண்கள்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கலையரசன், ஜனனி ஐயர், ஸ்ஷிவடா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள கலையரசன், ஒரு பார்வையற்ற கதாபாத்திரத்தை எடுத்து நடித்துள்ளார். இப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள், பார்வையற்ற மாணவர்கள் கண்டுக்களிக்க இப்படத்தின் ஒரு சிறப்பு காட்சியை சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் ஏற்பாடு செய்தார். அந்த படத்தினை கான்பார்வையற்ற மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டு கண்டுகளித்தனர்.

Leave a Response