மீண்டும் இணையும் பிரபுதேவா – தமனா கூட்டணி!

Tamannah-Prabhudeva
சமீபத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்து வெற்றிநடை போட்ட திரைப்படம் “தேவி”. இப்படத்தில் பிரபுதேவா மற்றும் தமனா இனைந்து நடித்தனர். தற்போது சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்குள்ளார். அப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனா முடிவுற்ற நிலையில் கதாநாயகி வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் பிரபுதேவாவுடன் கதாயானகியாக இனைந்து நடிக்க தமனாவை படக்குழுவினர் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமனா தன்னுடைய ஒப்புதலை இன்னும் முழுமனதாக தெரிவிக்கவில்லை என்று ஒருபுறமும், தான் பிரபுதேவா உடன் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருபதாகவும் சொல்லிவருகிறார்.

சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படத்தில் தமனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனு ராமசாமியின் இந்த புதிய படத்தின் முழு விவரம் இன்னும் சில தினனகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response