
K.E.ஞானவேல்ராஜா’வின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சிங்கம் 3’. இப்படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களை இயக்கிய ஹரி இயக்குகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு முடிந்த தருவாயில் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாவதாக இருந்தது. சில தவிர்கமுடியாத காரணங்களால் இப்படம் தேதிகள் தள்ளி தள்ளி, இந்த மாதம் 26ம் தேதி வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கம் 3 ஆகிய இந்த இப்டம் ‘S3’ என்று பெயரிடப்பட்டு வந்தது. இப்படம் தற்போது ‘சி3’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
‘சி3’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணி இன்று முதல் முழுமூச்சாக இன்று முதல் துவங்குகிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி அவர்கள் இருவரும், இன்று மதியம் 2:00 மணிக்கு கோவை கங்கா திரையரங்கிலும், நாளை மாலை 3:00 மணியளவில் நெல்லை பேரின்பவிலாஸ் திரையரங்கிலும் அதே நாள் மாலை 6:30 மணியளவில் மதுரை ஜாஸ் சினிமாஸிலும் ரசிகர்களை சந்தித்து ‘C3’ படத்தின் ப்ரோமோஷன் பணியினை மேற்கொள்கின்றனர் சூரியாவும், ஹரி அவர்களும்.
‘சி3’ என்று பெயர் மாற்றப்பட்ட விஷயத்தை படத்தின் ப்ரோமோஷன் பணிகளை பற்றியும் இப்படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



