விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் செயக்கொடி இயக்கியுள்ள படம் ‘புரியாத புதிர்’. இப்படத்தின் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகிற 13ம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
ஆனால் இப்படத்தின் தயரிப்பாளர் தீபன் தயாரிக்கும் ‘ஆக்கோ’ படம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையால் ‘புரியாத புதிர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளிவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
‘புரியாத புதிர்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.