மோ திரை விமர்சனம்

thumbஅடிக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மக்களிடம் பேய் இருக்குனு பொய் சொல்லி போய் ஓட்டி காசு பார்க்கும் வேலையை செய்துவருகிறார்கள் சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா, ராமதாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ்.

அடுக்குமாடி குடியிருப்பில் செக்ரட்டரியாக இருக்கும் செல்வாவை இதே போல் ஏமாற்றி பல லட்சம் காசு வாங்க்குகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

இவர்களை வைத்து முன்னால் எம்.எல்.ஏ மைம் கோபி வாங்க நினைக்கும் ஒரு பழைய ஸ்கூலை வாங்க நினைக்கிறார் செல்வா. பேய்கள் இருந்தால் வாங்க மாட்டார் என தெரிந்து கொண்டு சுரேஷ் ரவி மற்றும் நண்பர்களை வைத்து ஸ்கூலில் பேய் இருப்பதுபோல் மைம் கோபியை ஏமாற்றச் சொல்கிறார். இல்லை என்றால் போலீஸில் காட்டிகொடுத்துவிடுவேன் என பயம் காட்டுகிறார் செல்வா.

வேறு வழி இல்லாமல் ஸ்கூலுக்கு புறப்படுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் நண்பர்கள். அங்கு மைம் கோபியை பயத்தின் உச்சகட்டத்திற்கு கொண்டுசென்று ஓடவிடுகிறார்கள். அதன் பின்பு தான் தெரிகிறது அந்த ஸ்கூலில் உண்மையிலே பேய் இருக்கிறது என்று. இந்த பேயிடம் இருந்து தப்பித்தார்களா?, ஸ்கூலை செல்வா வாங்கினாரா?, என்பதே படத்தின் மீதிக்கதை.

சன் ம்யூசிக் ஆங்கர் சுரேஷ் ரவி தன்னோட கதாபாத்திரத்த சிறப்பா செஞ்சிருக்கார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த வருடத்தில் இரண்டாவது பேய் படம். பேய் வேஷம் போட்டு நல்லாவே நடிச்சிருக்காங்க. முனிஸ்காந்த் காமெடி எப்பவும் போல பக்கா.

சுவாரஸ்யாமான காட்சிகளோடு காமெடிகளையும் சேர்த்து சொல்லவந்த விஷயத்தை அருமையான திரைக்கதையில் நன்றாக சொல்லி உள்ளார் இயக்குனர் புவன் நல்லான்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பின்னனி இசை மற்றும் விஷ்ணுவின் ஒளிப்பதி படத்திற்கு பலம்.

மொத்தத்தில் சிரிப்புக்கு ‘மோ’ கியாரண்டி.

Leave a Response