பலே வெள்ளையத் தேவா விமர்சனம்

balae_3104992fஇயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், கோவை சரளா, சங்கிலி முருகன் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’.

சசிகுமார் கதை விசையத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துபவர் தான், அப்பறம் ஏன் இப்படி ஒரு கதை ஒகே பண்ணுனார்னு தெரியல. கதையே இல்லாத படமாக இருக்கிறது.

சசிகுமார் படிப்பை முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சசிகுமாரின் அம்மா ரோகினி போஸ்ட் மாஸ்டராக இருக்கிறார். அவருக்கு மதுரை பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு பணிமாற்றம் வருகிறது.

இருவரும் கோவை சரளா- சங்கிலி முருகனின் வீட்டில் குடியேறுகிறாகள். அங்கு நடிகை தன்யாவை பார்த்வுடன் காதல் வருகிறது. பின்பு கோவை சரளாவையும், சங்கிலி முருகனையும் கைக்குள் போட்டுக் கொண்டு நாயகியை பின் தொடர்கிறார் சசிகுமார்.

அதே ஊரில் கேபில் டி.வி நடத்தி வரும் வில்லனுடன் பிரச்சனை ஆகிறது. அந்தப் பிரச்சனையால் ஜெயிலுக்குச் செல்கிறார். அரசாங்க வேலை கிடைக்காமல் போகிறது. அந்த வில்லனை எப்படி பழி வாங்குகிறார்?, தன்யாவுடன் இணைந்தாரா? என்பதே இப்படத்தின் கதை.

படத்தில் நல்ல காட்சி என்று சொல்வதற்குக் ஒன்று கூட இல்லை. சசிகுமாரின் காதல், காமெடி இரண்டுமே சரியில்லை. ஒரு சண்டைக் காட்சி மட்டும் ஓரளவு ஓகே.

கோவை சரளாவின் காமெடி சகிக்கவில்லை. இப்படத்தின் பெரிய மைனஸ் கோவை சரளாவின் காமெடி என்றே சொல்லலாம்.

நடிகை தன்யா பார்க்க அழகாக இருக்கிறார். பார்க்க மட்டும் தான் அழகாக இருக்கிறார். நடிப்பில் ஒன்றும் இல்லை.

ரோகினி பொறுப்பான அம்மாவாக வந்து தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மதுரை மற்றும் தேனியின் கிராமத்து அழகை நன்றாக பதிவு செய்திருக்கிறார் ரவீந்திரநாத். இசை கூட பெரிதாக ஒன்றும் இல்லை.

சசிகுமார் படங்களிலே சகித்துக் கொள்ள முடியாத படமாக இப்படம் இருக்கிறது. இந்தப் பெருமை  இயக்குனர் சோலை பிராகஷைத் தான் சேரும்.

மொத்தத்தில் ‘பலே வெள்ளயத் தேவா’ சொந்த காசுல சூனியம் வச்சுக்கிறது. படத்துக்குப் போங்க ஏமாற்றத்துடன் வாங்க.

Leave a Response