ஆஸ்கர் போட்டியிலிருந்து விசாரணை வெளியேறியது


visaranai-movie-stills-and-posterவெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் , சமுத்திரக்கனி உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் விசாரணை. இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர் .

இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச விழாக்களில் விருது பெற்றது. அதுமட்டுமின்றி இப்படம் தேசிய விருதும் பெற்றது. தொடர்ந்து இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

விசாரணை படத்திற்கு விருது கிடக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்கர் போட்டியிலிருந்து  வெளியேறியுள்ளது.

ஆஸ்கர் போட்டியிலிருந்து  இப்படம் வெளியேரினாலும், தமிழ்ப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படட்தே கவுரவம் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


 

Leave a Response