பார்த்திபன் படத்தில் சிம்ரன்


simran-on-producing-filmsவிஜய் நடித்த ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மூலம் 1992-ல் அறிமுகமானவர் சிம்ரன். அதன் பிறகு தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திருமணத்துக்குப்பிறகு நாயகியாக நடிக்க வாய்ப்பு ஏதும் வரவில்லை.

பின்னர் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தார். ‘ஆஹா கல்யாணம்’ ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘கரையோரம்’ ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் வந்தார்.

இப்போது பார்த்திபன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்திலும் சிம்ரன் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக சாந்தனு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். மேலும் படத்தில் பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய சிம்ரன், “பார்த்திபன் இயக்கத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நான் சிறிது நேரம் வந்து சென்றாலும் என்னுடைய கேரக்டர் உங்கள் மனதில் பதியும்படியாக இருக்கும். மேலும் படங்களில் சிறிய கேரக்டரில் நடிக்க அழைத்தாலும் எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்’’ என்றார்.


 

Leave a Response