லண்டன் ரசிகர்களை சென்னை 28 – II திரைப்படம் மூலம் உற்சாகப்படுத்த தயாராக இருக்கின்றது ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’


18562-nலண்டன் வாழ் தமிழ் ரசிகர்களை இன்று முதல் உற்சாக வெள்ளத்தில் மூழ்கடிக்க தயாராக இருக்கின்றது ‘சென்னை 28 – II’ திரைப்படம். இந்த அணியினரை லண்டன் – தமிழ் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கும் பெருமை நடிகர் நிதின் சத்யாவின்   ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’  நிறுவனத்திற்கு இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

“ஒரு நடிகராக என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டிய திரைப்படம் சென்னை 28…. என்னுடைய தயாரிப்பில் உருவாகும் முதல் படமும் ஏறக்குறைய அதே குழுவினரை தான் உள்ளடக்கி இருக்கின்றது….சமீபத்தில் நடைபெற்ற அந்த பட பூஜையில்,  என்னுடைய சென்னை 28 அணியினர் திரளாக வந்து கலந்து கொண்டு, தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்கும் எனக்கு நல்லதொரு வரவேற்பை அளித்தனர்…. நடிகர் – தயாரிப்பாளர் என்பதை தாண்டி என்னை தற்போது ஒரு விநியோகஸ்தராகவும் அறிமுக படுத்தி இருக்கிறது சென்னை 28 II  திரைப்படம்…. சென்னை 28 இரண்டாம் பாகத்தின் லண்டன் வெளியீட்டு உரிமையை என்னுடைய  ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் நான் வாங்கியிருப்பது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது….” என்று உற்சாகமாக உற்சாகமாக கூறுகிறார்  ‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’   நிறுவனத்தின் நிறுவனர் நிதின் சத்யா.


 

Leave a Response