ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவலுக்கு அப்பல்லோ மறுப்பு அறிக்கை


70th Independence Day celebration at Chennaiசென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிக்சை அளித்து வரும் நிலையில் ஜெயலலிதா மரணமடைந்ததாக இன்று மாலை தகவல் வெளியானதால் சென்னையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா மரணித்ததாக வெளியான தகவல்களை அடுத்து அப்போலோ மருத்துவமனை அருகே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதோடு அப்போலோ மருத்துவமனையினுள் செல்ல முயற்சித்ததால் அதிமுக தொன்டர்களுக்கும் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்ட்டிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோவின் புதிய அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் இருந்து சென்னை வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வரின் உடல் நலம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


 

Leave a Response