நவம்பர் 10 முதல் திரையரங்குகளை குவிக்க வருகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’

kik
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. 2006ல் ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி வெற்றிநடை போட்டுவந்தார் ஜி.வி.பிரகாஷ்.

நடிப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டு 2008ல் ரஜினிகாந்த் நடித்த ‘குசேலன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷாகவே ஒரு பாட்டில் மட்டும் தலை காட்டினார் ஜி.வி.பிரகாஷ். பினார் அதையே சில படங்களிலும் தொடர்ந்தார். பின்னர் ‘பென்சில்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் நடித்த ‘டார்லிங்’ திரைப்படம், அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமாக 2015ல் வெளியானது.

இதுவரை அவர் கதாநாயகனாக நடித்து நான்கு படங்கள் வெளியாகினா. அவை அனைத்தும் வெற்றி படங்களே. வெற்றி படங்களாக இருந்தாலும் அப்படங்கள் UA மற்றும் A என தணிக்கை துறையினரால் சான்று அளிக்கப்பட்டன. ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ தணிக்கை துறையினரால் U சான்று அளிக்கப்பட்டுள்ளது. இப்படமே ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் முதல் ‘U’ தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் எம்.ராஜேஷ் என்றாலே படத்துக்கு நகைச்சுவை குறை இருக்காது என்று ரசிகர்களால் பாராட்டு பெற்றவர். அதே சமயம் அவர் படங்களில் இரட்டை அர்த்தங்களும் நிறைந்திருக்கும் என்றும் குறை சொல்லப்பட்டவர். இந்த படம் இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்ககூடிய வகையில் வெறும் நகைச்சுவை மட்டுமே நிரந்திருக்க்மும் என சொல்லப்படுகிறது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ நவம்பர் 10ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. எம்.ராஜேஷ் – ஜி.வி.பிரகாஷ் ஆட்டம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும், திரையரங்குகளை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Response