தென்னிந்திய திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் சங்கத்தில், நடிகர்கள் ஏஜென்டாக உள்ளவர் திரு.சி.சங்கையா. இவர் மீது சில புகார்கள் குவிந்த காரணத்தினால், சங்கையா நடிகர் சங்கத்தில்லிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நடிகர் சங்கம் மீது ஜூலை 18, 2016 அன்று வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை நவம்பர் 5, 2016 அன்று விசாரித்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் 11வது கூடுதல் நீதிபதி, IA No. 9155/16, 9156/16 ஆகிய எண்களை கொண்ட வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.