காஷ்மோரா யு/ஏ சான்றிதழுடன் வெளியாக உள்ளது


kashmoraகார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காஷ்மோரா’ படம் தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றது. இந்த படம் அக்டோபர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயந்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

தமிழில் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும், தெலுங்கில் பிவிபி சினிமாஸ் நிறுவனமும் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக முடிவுற்று தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.


 

Leave a Response