தனுஷின் ‘பவர் பாண்டி’யில் ஹீரோவான ரோபோ ஷங்கர்!

maxresdefault-2
‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியான ‘தொடரி’ அன்லைக்குகளை குவித்து வருகிறது. ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘கொடி’. தற்போது, கைவசம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம், வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் படம், மாரி-2’ என அடுத்தடுத்து பிஸி செடியூல். இதுமட்டுமன்றி தனுஷ் ‘பவர் பாண்டி’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.
ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரசன்னா, சாயா சிங் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டன்ட்மேன் குறித்த படமான இதில் வரும் படத்தின் ஹீரோவாக ரோபோ ஷங்கர் நடிக்கவுள்ளாராம்.
இதனை தனுஷ் தனது ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Response