சிலம்பரசன் பாடியிருக்கும் ‘ரம்’ படத்தின் “பேயோ போபிலியா” வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது

1474631125_simbu

ஆங்கிலத்தில் ‘போபியா’ என்ற வார்த்தைக்கு பயம் என்பது பொருள்…இதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்… ஆனால் ‘போபிலியா’ என்ற வார்த்தையை நாம் இதுவரை கேட்டிருக்க மாட்டோம்… அதற்கான அர்த்தத்தை விளக்குகிறது ‘ரம்’ படத்தின் பேயோ போபிலியா பாடல். அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்து இருக்கும் ரம் படத்தின் “பேயோ போபிலியா…” பாடலானது இன்று வெளியிடப்பட்டது. அனிரூத்தின் துள்ளலான இசையில், சிலம்பரசன் பாடியிருக்கும் இந்த பாடலானது, வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துவிட்டது.

“பேய் என்று ஒன்று இருக்கிறதா… இல்லையா என்பதை உணர்த்தும் பாடல் தான் எங்களின் “பேயோ போபிலியா…” அதுமட்டுமின்றி, இறந்தவர்களின் ஆத்மா கூட இந்த திகில் நிறைந்த உலகிற்கு திரும்ப வர யோசிக்கும்… என்கின்ற முக்கியமான கருத்தை முன் நிறுத்தி இந்த பாடலானது உதயமாகி இருக்கிறது… ” என்று கூறுகிறார் கவிஞர் விவேக் வேல்முருகன்.

“இந்த பாடலுக்கான காட்சிகளை நாங்கள் படப்பையில் உள்ள காட்டு பகுதியில் இரண்டு நாட்கள் இருந்து படமாக்கி இருக்கிறோம். முதல் முறையாக நான் இத்தகைய வேகமான தாளத்தில் உருவாகி இருக்கும் பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன்…அதுவும் அந்த காட்டு பகுதியில் இவ்வளவு வேகமாக நடனமாட சற்று கடினமாக தான் இருந்தது.. சதீஷ் நடன இயக்கம் செய்திருக்கும் எங்களின் “பேயோ போபிலியா…” பாடலில் பாடலாசிரியர் விவேக் சாரும் நடனம் ஆடியிருக்கிறார்…ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில், அதுவும் இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்த எங்களுக்கு சிறிது பயமாக இருந்தாலும், எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பால், நாங்கள் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து விட்டோம்…எங்களின் ‘ரம்’ படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் பயத்திலும், குழப்பத்திலும் தத்தளித்து கொண்டிருக்க, திடிரென்று அவர்கள் அனைவரின் மத்தியிலும் ஒரு தெளிவு பிறக்கும்… அது தான் “பேயோ போபிலியா…” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘ரம்’ படத்தின் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷ்.

https://www.youtube.com/watch?v=W7XIHTODwVs&feature=youtu.be

Leave a Response