சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த மௌன குரு படத்தின் ஹிந்தி ரீமேக் இது. தமிழில் உள்ளதுபோல் இல்லாமல் நாயகியை மையமாக வைத்து கதை மாற்றப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று வெளியான அகிரா, முதல் இரண்டு நாள்கள் கெளரவமான வசூலைப் பெற்றுள்ளது. வெள்ளியன்று ரூ. 5.15 கோடியும் சனியன்று ரூ. 5.30 கோடியும் வசூலித்துள்ளது. இரண்டு நாள்களில் ரூ. 10.45 கோடி! இதனால் மகிழ்ச்சியடைந்த முருகதாஸும் சோனாக்ஷி சின்ஹாவும் ட்விட்டரில் வழியாகத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இதற்குப் பிறகு மகேஷ் பாபுவை கதாநாயகனாகக் கொண்டு தமிழ்-தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ்.அந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.