தனுஷுக்கு நோ சொல்லி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிய – சமந்தா

SS_2

வெற்றிமாரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் வடசென்னை இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்காக அவர் தனது கேரக்டரை பல படுத்தும் வகையில் குடிசை வாழ் மக்களின் வாழ்வியலை கற்றுக் கொள்ள டிரைனிங் எடுத்துக் கொண்டிருந்தார், திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார்.

உடனே திரிஷா இல்லன்னா நயந்தாரா மாதிரி சமந்தா இல்லன்னா அமலா பால் என்று அமலாவை தங்களது படத்தில் இனைத்தனர் ஆனால் அதுவும் இப்ப இல்லை இப்போது ஹீரோயின் இல்லாத படத்தில் நடிக்கின்றார் தனுஷ்.

ஆனால் ஒரு வேலை தனுஷை வெறுப் பேற்ற சமந்தா முடிவெடுத்து விட்டாரோ என்னவோ சடாரென சிவகார்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்க அடுத்த வருடம் தொடங்க இருக்கும் திரைப்படத்தில் தன்னை இனைத்துள்ளார் சமந்தா.

எதுக்காக தனுஷ் படத்தை மறுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாகியிருக்கும் சமந்தா ஏன்? எதற்கு? என்று பல்வேறு சந்தேக கேள்விகளை கோடம்பாக்கத்தில் உருவாக்கியிருக்கிறார் சமந்தா.

எது எப்படியோ ஒழுங்க படம் வந்தா சரி..

Leave a Response